Writing Picture Books - Tamil Workshop
Date and time
Location
Online event
சேர்ந்து உருவாக்கலாம்: சிறுவர்களுக்கான படப் புத்தகங்கள்
About this event
Writing Picture Books - Tamil Workshop
Date: 11, 18 and 19 June 2022
Time: 9.30pm – 12.30pm (SGT)
Duration: 9 hours (3 workshops x 3 hours)
சிறுவர் படப் புத்தங்கங்களை நாம் உருவாக்குவதன் மூலம் அவர்களுக்கு தமிழின் மேல் உள்ள ஆர்வத்தை காலத்திற்கும் வளரவைக்க முடியும். ஏனெனில், ஒரு நல்ல கதை நம் மனதில் மட்டும் வேர்கொள்ளாமல் அதனுடன் நம் சிந்தனைகளையும் வளரத் தூண்டும், அல்லவா?
சிறுவர்களுக்கான படப் புத்தகங்களை உருவாக்குவது ஒரு கலை. மனதை ஈர்க்கும் கதாப்பாத்திரங்கள், அவைகள் வாழும் கனவுலகம், மற்றும் குறுகிய சொற்களைக் கொண்டு நாம் எவ்வாறு ஒரு அழகான கதையைப் படைக்கலாம்?
மூன்று வாரங்கள் தொடர்ந்து நடக்கும் இந்த சுவாரசியமான பட்டறையில், எழுத்தாளர் அபி க்ரிஷ் சிறுவர்களுக்கு எழுதுவதைப் பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்வார்:
- ஒரு நல்ல படப் புத்தகத்தின் சிறப்பு அம்சங்கள் என்ன?
- யாருக்காக எழுதுகிறோம்? ஏன் எழுதுகிறோம்?
- என்ன கதை எழுதலாம்?
- கருத்துக்களையும் பாடங்களையும் மறைத்து எழுதுவது எப்படி?
- சிறுவர்களுக்கு எழுதும் விதங்கள்
- கதாப் பாத்திரங்களும் கதையமைப்பும்
- கதையும் எழுத்தும் திருத்தி அமைத்தல்
- பக்கம் திருப்பங்களின் முக்கியத்துவம்
- படங்களின் அமைப்பும் முக்கியத்துவமும்
- சிரிப்புத்தன்மையும் நம்பிக்கையூட்டமும்
- ஒரு சிறந்த எழுத்தாளரின் அம்சங்கள் என்ன?
- பதிப்பாளர்களும் படைப்புமுறையும்
- உங்கள் கதையை உருவாக்கலாம்!
This workshop will be conducted in Tamil.
About the Trainer
Abhi Krish
அபி வளர்ந்து வரும் இரு மொழி எழுத்தாளர். இன்றைய தலைமுறையினர் ரசிக்கும் கற்பனைமிக்க சிறுவர் கதைகள், பாடல்கள், மொழிச்சார்ந்த வளங்கள் ஆகியவற்றை 'நூல்மோன்ஸ்டர்ஸ்' என்ற தனது இணையதளத்தில் வழங்கி வருகிறார்.
Abhi is the founder of Nool Monsters - a bilingual platform sharing contemporary stories, songs, and approaches for children to learn Tamil playfully. Through laughter, music, and utter silliness, she’s raising a generation of wee magical guardians who will protect and usher their mother tongue into the future.